Home Slider ஜெர்மனி ரயில் நிலையத்தில் கிடந்த பையில் வெடிகுண்டுகள் – மக்கள் பீதி

ஜெர்மனி ரயில் நிலையத்தில் கிடந்த பையில் வெடிகுண்டுகள் – மக்கள் பீதி

1093
0
SHARE
Ad

குளோக்னி,டிச.14 – ஜெர்மனி நாட்டு ரயில் நிலையத்தில் கிடந்த பை ஒன்றில் வெடிகுண்டுகள் இருந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

ஜெர்மனி நாட்டில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பான் நகரில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நீலநிற டிராவல் பை ஒன்று நீண்ட நேரமாக அனாதையாக கிடந்தது.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை கைப்பற்றி சோதனை நடத்திய போது வெடிகுண்டு மற்றும் அதை வெடிக்க செய்வதற்கான சாதனங்கள் இருந்தன.

உடனே அவற்றை போலீசார் கைப்பற்றி 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி கூறும்போது, ‘இது வெடித்திருந்தால் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். தக்கநேரத்தில் கைப்பற்றி செயல் இழக்க செய்து விட்டோம்’ என கூறினார்.