Home 13வது பொதுத் தேர்தல் காப்பாரில் மாணிக்கா மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை?

காப்பாரில் மாணிக்கா மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை?

1223
0
SHARE
Ad

S-Manikavasagam-pkrடிசம்பர் 15 – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறப்பான சேவை வழங்குவதிலும், நாடாளுமன்றத்தில் முழக்கமிடுவதிலும், இந்தியர்களுக்கான எந்தவொரு பிரச்சனையாலும் அரசாங்க அலுவலகங்களிலும் காவல் நிலையங்களை முற்றுகையிடுவதிலும் முதன்மை வகிப்பவர் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம்.

இருப்பினும் பிகேஆர் கட்சியின் உட்கட்சிப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் அவருக்கு ஏற்கனவே காப்பாரில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற ஆரூடங்கள் நிலவி வந்தன.

இந்த நிலையில் சிப்பாங் அதிகாரிகளால் உடைக்கப்பட்ட சாமி மேடை விவகாரத்தில் சிலாங்கூர் மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூறியும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ள மாணிக்கவாசகத்திற்கு மீண்டும் காப்பார் தொகுதி வழங்கப்படாது என்று பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

முதல்வர் டான்ஸ்ரீ காலிட் பதவி விலக வேண்டும் என்றும் கூறியதை மாணிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தை பிகேஆர் தலைமைத்துவம் கடுமையாக கருதுவதால் அதனால், மாணிக்காவுக்கு மீண்டும் போட்டியிட அனுமதியில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது.