
அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமட் ஹாசான், அனைத்துலக வாணிபத் துறை அமைச்சர் தெங்கு சாப்ருல், தொழில் முனைவோர் கூட்டுறவுக் கழகத் துறை அமைச்சர் இவோன் பெனடிக்ட் ஆகியோரும் ஜெர்மனிக்கு வருகை தந்திருக்கின்றனர்.
ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்ளும் பிரதமர் அந்நாட்டு அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் சந்திப்பார். ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவுடனான மிகப் பெரிய வணிகப் பங்காளித்துவ நாடாக விளங்குகிறது.