Home இந்தியா சரத்குமார், சமத்துவ கட்சியைக் கலைத்தார் – பாஜகவில் இணைந்தார்

சரத்குமார், சமத்துவ கட்சியைக் கலைத்தார் – பாஜகவில் இணைந்தார்

287
0
SHARE
Ad

சென்னை: எல்லா நடிகர்களைப் போலவே, நடிகர் சரத்குமாரும் அரசியலில் சரணடைந்து விட்டார். நீண்ட காலமாக நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார்.

எல்லா நடிகர்களும் ஆர்ப்பாட்டமாக கட்சியை ஆரம்பிப்பதும் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒரு கட்சியில் ஐக்கியமாவதும், அல்லது கட்சியைக் கலைத்து விட்டு வேறொரு கட்சியில் இணைவதும் தமிழ் நாட்டு அரசியலில் வழக்கமான காட்சிகள்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார். இதன் மூலம் அவர் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அவர் விருதுநகர், தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம். அந்தத் தொகுதிகளில் சரத்குமார் சார்ந்த சமூகத்தின் வாக்காளர்கள் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சரத்தின் மனைவி ராதிகாவும் பாஜவில் இணைந்தார்.