இது பற்றி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் செயல்படும் வானொலி நிலையம் டெலிபோனில் ஆள்மாறாட்டம் செய்து பேசி சில தகவல்களை சேகரித்து வெளியிட்டது.
இந்நிலையில் நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு ஆஸ்திரேலிய ரேடியோ நிலையத்தின் ஒலிபரப்பே காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து வானொலி நிலையம் விசாரித்து வருவதாக கூறினாலும் அந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. எனவே தகவல் தொடர்பு கண்காணிப்பு அதிகாரிகள் விரைவில் விசாரணை தொடங்குவார்கள்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிமையை மீறி செயல்பட்டதா? என்பது பற்றி விசாரிக்கப்படும். அது உண்மை என கண்டறியப்பட்டால் லைசென்சு ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.