Home உலகம் ஜெர்மனியில் 1எம்டிபி புலனாய்வு தொடர்பில் கைப்பற்றப்பட்ட புகாத்தி சொகுசு கார்கள்

ஜெர்மனியில் 1எம்டிபி புலனாய்வு தொடர்பில் கைப்பற்றப்பட்ட புகாத்தி சொகுசு கார்கள்

442
0
SHARE
Ad

மூனிக் : 1எம்டிபி ஊழல் விசாரணைகள் நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஜெர்மனியில் 1எம்டிபி புலனாய்வு தொடர்பாக 4 புகாத்தி வெய்ரோன் ரகக் கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மிகவும் விலையுயர்ந்த சொகுசுக் கார்களாக இவை கருதப்படுகின்றன.

ஜெர்மனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனக் கிடங்கில் அந்தக் கார்கள் கைப்பற்றட்டுள்ளன.

இதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் மலேசியக் காவல் துறையும் உண்மை நிலவரங்களைக் கண்டறிய முற்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

காவல்துறை தலைவர் ரசாருடின் ஹூசேன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த 4 கார்களின் விலை மில்லியன் கணக்கான ஈரோவாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அண்மையில் வட மூனிக் நகரில் உள்ள பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாகனப் பாதுகாப்பு மையத்தில் இந்தக் கார்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இவை 1எம்டிபி புலனாய்வு தொடர்பானவை என்றும் ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்தன.

உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து 20 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.