Home இந்தியா யாரையும் புண்படுத்தவில்லை; தவறாகப் புரிந்து கொண்டார்கள்: ஈவிகேஎஸ் விளக்கம்

யாரையும் புண்படுத்தவில்லை; தவறாகப் புரிந்து கொண்டார்கள்: ஈவிகேஎஸ் விளக்கம்

513
0
SHARE
Ad

i3சென்னை, ஆகஸ்ட் 19- பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது, போயஸ் தோட்டத்திற்குச் சென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரக்குறைவாக விமர்சித்துப் பேசியதாக, அதிமுக-வினரும் பாஜக-வினரும் தமிழகம் முழுவதிலும் கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்க  அவர் சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

“பாஜக – அதிமுக உறவு குறித்த என் விமர்சனம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. முதல்வரையோ, பிரதமரையோ அவமதிக்கும் எண்ணமும் எனக்குக் கிடையாது” என்று அப்போது அவர் கூறினார்.

மேலும், தம் மீதான வழக்கைச் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் அவர் ஆவேசமடைந்தார். “ஜெயலலிதா சோனியாவை எப்படிப் பேசுவார் தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளருக்கும் அவருக்குமிடையே பெருத்த வாக்குவாதம் உண்டானது.

இதனால் அங்கே சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது..பின்னர் அந்தச் செய்தியாளர் வெளியேற்றப்பட்டார்.