Home கலை உலகம் கபாலி தலைப்புப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: தாணு!

கபாலி தலைப்புப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: தாணு!

553
0
SHARE
Ad

rajini,சென்னை, ஆகஸ்ட் 19- ரஜினிகாந்தின் புதுப்படத் தலைப்புப் பிரச்சினை சீக்கிரம் தீர்க்கப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

ரஜினி நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு ‘கபாலி’ என அப்படத்தின்இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அறிவிப்பு வெளியான உடனேயே புதுமுக நடிகரும் இயக்குநருமான சிவகுமார் என்பவர், கபாலி என்னும் தலைப்பு என்னுடையதாகும் எனக் கூறிச் சர்ச்சையை உருவாக்கினார்.

#TamilSchoolmychoice

கபாலி என்னும் பெயரில் 90 சதவீதம் படமும் எடுத்து, படப் பாடலையும் வெளியிட்டு விட்டதாகக் கூறி, அதற்கான ஆதாரத்தையும் காண்பித்தார். அவர் சொல்வது உண்மை தான்.

இந்தக் குழப்பம் எப்படி நேர்ந்தது?

தலைப்பை வெளியிடும் முன் திரைப்பட வர்த்தக சபை, கில்டு அமைப்பு போன்றவற்றில் அந்தத் தலைப்பில் படம் ஏதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டாமா?

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள தாணுவின் படத்துக்கே இப்படித் தலைப்பு பிரச்சினை வரலாமா? தயாரிப்பாளர் சங்கப் பட வரிசையில்  சரி பார்க்காமல் போனது எப்படி என்று திரையுலகினர் கேட்கிறார்கள்.

மேலும், ரஜினியின் 40 ஆண்டு திரை வாழ்க்கையில் இதுபோல் தலைப்புப் பிரச்சினை வந்ததே இல்லையாம்!

இதுகுறித்துக் கலைப்புலிதாணு கூறியதாவது:

“எங்கள் படத்துக்குக் கபாலி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தவுடன், தயாரிப்பாளர்கள் சங்கம், சேம்பர், கில்டு மூன்றிலும் இந்தத் தலைப்பில் ஏதாவது படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று விசாரித்துப் பார்த்தோம்.

அப்படி எதுவும் இல்லை எனத் தெரிந்தது. அதனால் தான் கபாலி என்று அறிவித்தோம்.

அதன் பிறகு தான் இப்படி ஒருபடம் இருப்பது தெரியவந்தது. அந்தத் தலைப்பை அவர்கள் புதுப்பிக்காமல் விட்டதால் தான் பெய்ர்ப் பட்டியலில் பெயர் இல்லாமல் போய்விட்டது. அதனால் வந்த குழப்பம் தான் இது. விரைவில் இந்தப் பிரச்சினையைப் பேசிச் சரி செய்துவிடுவோம் ” என்றார்.