Home இந்தியா மதுரையில் தங்கும் நிபந்தனையைத் தளர்த்தக் கோரிக்கை: ஈவிகேஎஸ் மனு ஏற்பு!

மதுரையில் தங்கும் நிபந்தனையைத் தளர்த்தக் கோரிக்கை: ஈவிகேஎஸ் மனு ஏற்பு!

481
0
SHARE
Ad

no-appologies-evksசென்னை- “மதுரையில் தங்கியிருந்து தினமும் காலை 10 மணியளவில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்” எனக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராசர் அரங்கத்தில் பணி புரிந்த பெண் ஊழியர் கொடுத்த தாக்குதல் புகாரில் வன்கொடுமைச் சட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைதாகும் சூழல் உருவானது.

கைதாகாமல் இருக்க ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன் பிணை கேட்டுத் தாக்கல் செய்த மனுவை, அவசர கால மனுவாக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், இவ்வழக்கில் இளங்கோவன் மதுரையில் 15 நாட்கள் தங்கியிருந்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல்நிலையத்தில்  கையெழுத்திட வந்த போது, அதிமுக-வைச் சேர்ந்த பெண்கள் துடைப்பத்தைக் காட்டிப் போராட்டம் நடத்தினர்.

காவல்நிலையத்திற்கு வரும் வழியில் பாதுகாப்புக் கொடுக்கவில்லை என்றும், காவல்நிலையத்தில் உட்காரக் கூட இடம் தரவில்லை என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மதுரையில் இளங்கோவன் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதனிடம் வேண்டுகோள் வைத்தார்.

இதை விசாரித்த நீதிபதி, இந்த மனு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று கூறியதோடு, இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு  உத்தரவிட்டார்.