காத்மாண்டு – நேபாள நாட்டில் கடந்த மாதம் 20-ம் தேதி, புதிய அரசியல் சாசன சட்டம் பிரகனப்படுத்தப்பட்டது. அதனைத் தொடந்து பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாக, புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின், புதிய அதிபராக சி.பி.என்.யுஎம்.எல் கட்சியின் வித்யா தேவி பந்தாரி(54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டு அரசியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென பல வருடங்களாக பந்தாரி போராடி வந்தார். இந்நிலையில் தான் அவர், நேபாளத்தின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பம் முதலே அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை பெற்று வந்த பந்தாரி, எதிர்கட்சி வேட்பாளரான கவுல் பகதுர் குருங்கை 100 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கார்தி வெளியிட்டுள்ளார்.