Home Featured நாடு நஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி! சுப்ரா!

நஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி! சுப்ரா!

947
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நேற்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

najib-hari raya open house-2016துன் அப்துல்லா படாவியும் – நஜிப்பும்…

நஜிப்பின் உபசரிப்பு விருந்தில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியும் கலந்து கொண்டு சிறப்பித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் படாவியின் வருகை குறித்துக் குறிப்பிட்டிருந்த நஜிப், அவருடைய வருகை தனது பெருநாள் கொண்டாட்ட மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளதாகவும், படாவிக்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும் அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

najib-zahid hamidi-hari raya open house-2016

உடல் நலம் குன்றிய நிலையில், தள்ளுவண்டியில் திறந்த இல்ல உபசரிப்புக்கு வந்த பெண்மணி ஒருவரை   வரவேற்கும் பிரதமர் நஜிப், துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி, அமைச்சர் முஸ்தாபா….

நஜிப்பின் திறந்த இல்ல உபசரிப்பில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் மற்ற மஇகா தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.

najib-hari raya open house-subra-2016

நஜிப் தம்பதியருடன்-சுப்ரா தம்பதியர்…

najib-hari raya open house-2016-crowds

நஜிப்பின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பொதுமக்கள்…