Home Featured கலையுலகம் “தாரா எச்டி” – பாலிவுட் இரசிகர்களுக்கான புதிய அஸ்ட்ரோ அலைவரிசை கோலாகலத் தொடக்கம்!

“தாரா எச்டி” – பாலிவுட் இரசிகர்களுக்கான புதிய அஸ்ட்ரோ அலைவரிசை கோலாகலத் தொடக்கம்!

704
0
SHARE
Ad

astro-tara-hd

கோலாலம்பூர் – நேற்று மாலை தலைநகரின் பிரபல தங்கும் விடுதி ஒன்றில் அஸ்ட்ரோவின் புதிய அலைவரிசையான ‘தாரா எச்டி’ கோலாகலமான அறிமுகத்தைக் கண்டது.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவரும். பிரதமர் துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, மைபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

dr-rajamani-with-local-artist

அஸ்ட்ரோ கலைஞர்களுடன் அஸ்ட்ரோ இந்தியப் பிரிவுக்கான உதவித் தலைவர் டாக்டர் ராஜாமணி

ஏற்கனவே பாலிவுட் ரசிகர்களுக்காக இயங்கி வரும், பாலிஒன் HD (அலைவரிசை எண் 251) என்ற அலைவரிசையோடு, தற்போது புதிய அலைவரிசையாக தாரா எச்டி, 108 என்ற அலைவரிசை எண்ணுடன் வலம் வரத் தொடங்கியுள்ளது.

பிரபல இந்திப் படங்களையும், மற்ற இந்திப் படவுலக நிகழ்ச்சிகளையும் கொண்ட 108 அலைவரிசையை துல்லிய ஒளிபரப்பில் இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

மேல் விவரங்களுக்கு www.astroonthego.com என்ற அகப்பக்கத்தை இரசிகர்கள் வலம் வரலாம்.

dr-rajamani-with-local-artist

நேற்று நடைபெற்ற தாரா எச்டி அறிமுக விழாவில் உள்ளூர் கலைஞர்களுடன் டாக்டர் இராஜாமணி….