மியன்மார் – சுமார் 170 டன் எடையுள்ள பச்சை மாணிக்கக் கல் ஒன்று மியன்மாரில் கண்டறியப்பட்டுள்ளது.
பல மில்லியன் டாலர் மதிப்புடைய அக்கல்லை இருந்த இடத்திலேயே சில காலம் வைக்கப்போவதாகவும், காரணம் அதை அங்கிருந்து நகர்த்துவதற்குத் தேவையான உபகரணங்கள் தன்னிடம் இல்லை என்றும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடக்கு கச்சினில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் 19 அடி நீளம் கொண்ட அக்கல், மலைக்குள் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது.
“அக்கல்லின் நுனியை சுரண்டிப் பார்த்த போது, அதற்கு அடியில் இருந்த மாணிக்கக் கல்லின் தரம் தெரிந்தது. அதன் தரம் மிகவும் உயர்வானது” என்று அதன் உரிமையாளரான டின்ட் சோய் (வயது 56) தெரிவித்துள்ளார்.
அப்பாறை சுமார் 170 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையது என்று சிலர் கணித்தாலும், டிண்ட் சோய் அது ஏறக்குறைய 5.4 மில்லியன் டாலர் மதிப்புடையது என்று தெரிவித்து வருகின்றார்.
பாரம்பரிய முறைப்படி மாணிக்கல் அணிகலன்கள் மற்றும் வளையல்களில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.