கோலாலம்பூர் – நாட்டிலுள்ள வங்கிகளை ஒருமுகப்படுத்தி இணைக்கும் பேங்க் நெகாராவின் முயற்சியாக, ஆர்எச்பி (RHB Bank Bhd) வங்கியும், ஏம் பேங்க் எனப்படும் அராப் மலேசியா வங்கியும், ஒரே வங்கியாக இணைந்து செயல்படும் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் அந்த இரண்டு வங்கிகளும் தங்களின் பங்குப் பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, கோலாலம்பூர் பங்கு சந்தைக்கு முன் அறிவிப்பு கொடுத்திருக்கின்றன.
இரண்டு வங்கிகளுமே சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு, அதிகமான இலாபங்களை ஈட்டும் வங்கிகளாகத் திகழ்வதால், புதியதாக உருவெடுக்கப்போகும் வங்கியும், வணிக ரீதியாக வலுவான, மிகப் பெரிய வங்கியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.