Home One Line P2 காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி!

காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி!

552
0
SHARE
Ad

சென்னை: (இந்திய நேரம் காலை 9:19 மணி நிலவரம்): கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற காமராஜ் நகர் தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது.

காமராஜ் நகரில் சுமார் 24,296 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்ட நிலையில், 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது காமராஜ் நகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று, என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)