பெட்டாலிங் ஜெயா: நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் தேர்ந்தெடுப்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
ஆனால், கூட்டணி அதை அறிவிப்பதற்கு முன்பு அதன் இதர கூட்டணி கட்சிகளுக்காக காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி தனது வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன், அதன் பங்காளி கட்சிகளான வாரிசான் மற்றும் துன் டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான முன்னாள் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணி அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மூலம் ஏற்கனவே ஓர் அறிக்கையை வெளியிட்டது. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
“நம்பிக்கைக் கூட்டணி ஓர் அமைப்பாக, ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துள்ளது, ஆனால், வாரிசான் மற்றும் டாக்டர் மகாதீர் தலைமையிலான முன்னாள் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாங்கள் குறிப்பிட வேண்டும்.” என்று அவர் புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த வாரம் (ஜூன் 9) செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) பிரதமருக்கான தேர்வை நம்பிக்கைக் கூட்டணி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், கூட்டணியின் போராட்டங்களுக்கு மைய கருப்பொருளாக இருப்பதால், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான திட்டங்கள் எப்போதும் நம்பிக்கைக் கூட்டணியால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.
“எங்களைப் பொறுத்தவரை, மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும், ஆனால் செயல்பாட்டில் எங்கள் கொள்கைகளை நாங்கள் தியாகம் செய்யக்கூடாது.
“மாற்றம் என்பது மக்களின் கவலைகளைப் பற்றியதாக இருக்க வேண்டும். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது பற்றியும் இருக்க வேண்டும்.
“இது நம்பிக்கைக் கூட்டணியின் ஒரு முக்கிய பிரச்சனை, எனவே இந்த அறிவிப்பை தாமதப்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.” என்று பிகேஆர் தலைவர் கூறினார்.