Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வானொலி : 16.1 மில்லியன் வாராந்திர நேயர்களுடன் உள்ளூர் வானொலிகளில் முதல் நிலை!

ஆஸ்ட்ரோ வானொலி : 16.1 மில்லியன் வாராந்திர நேயர்களுடன் உள்ளூர் வானொலிகளில் முதல் நிலை!

704
0
SHARE
Ad


• 21.6 மில்லியன் தற்போதைய வானொலி நேயர்களில் 74.6% சந்தைப் பங்கு
• ERA & SINAR மலேசியாவில் முதல் மற்றும் இராண்டாம் நிலை வானொலிகள்
• ERA, MY, ராகா, Hitz.fm அனைத்து மொழிகளிலும் முதல் நிலை வானொலி தரங்கள்

தீபகற்ப மலேசியாவில் 97.2% தனிநபர்களை மலேசிய வானொலிச் சென்றடைந்து ஒரு புதிய உயர்வை அடைந்துள்ளதை 2022 ஜி.எஃப்.கே வானொலி நேயர்களின் அளவீட்டு ஆய்வின் (GfK Radio Audience Measurement Survey, RAM) இரண்டாம் அலைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இது முறையே 21.6 மில்லியன் வாராந்திர வானொலி நேயர்களுக்குச் சமம். முந்தைய ஆய்வைக் காட்டிலும் வாராந்திர வானொலி நேயர்களின் எண்ணிக்கை 300,000 அற்புதமான அதிகரிப்பைக் குறிக்கிறது. ஆஸ்ட்ரோ வானொலி முறையே 16.1 மில்லியன் வாராந்திர நேயர்கள் அல்லது 21.6 மில்லியன் வானொலி நேயர்களில் 74.6% சந்தைப் பங்கைக் கைப்பற்றி முதல் நிலை உள்ளூர் வானொலியாகத் தன் நிலையைத் தொடந்து மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான நேயர்களைக் கொண்ட வானொலி இயக்குனராக அதன் தலைமைத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது.
18.4 மில்லியன் சராசரி மின்னியல் வானொலி பதிவிறக்கங்கள் (ஸ்ட்ரீம்கள்), 26.6 மில்லியன் சமூக ஊடகங்களைப் பின்தொடர்பவர்கள், 177.4 மில்லியன் காணொளி இரசிகர்கள், மற்றும் 75.1 மில்லியன் மாதாந்திரச் சராசரி முகநூலின் அடைவுநிலை (reach) ஆகியவற்றின் வழி வானொலி நேயர்கள் எண்ணிக்கையின் அடைவுநிலையில் ஆஸ்ட்ரோ வானொலி உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ வானொலியின் அனைத்து தரங்களும் அனைத்து மொழிகளிலும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளனர்: ராகா, முதல் தர தமிழ் வானொலி; ERA, முதல் தர மலாய் வானொலி; HITZ FM, முதல் தர ஆங்கில வானொலி மற்றும் MY, முதல் தரச் சீன வானொலி. ஆஸ்ட்ரோ வானொலியின் தமிழ் தரம் 1.6 மில்லியன் நேயர்களைப் பதிவிட்டு முறையே 86.1% அடைவுநிலையைப் பதிவிட்டுள்ளது, மலாய் தரங்கள் 9.7 மில்லியன் நேயர்களைப் பதிவிட்டு முறையே 69.0% அடைவுநிலையைப் பதிவிட்டுள்ளன, ஆங்கிலத் தரங்கள் 3.7 மில்லியன் நேயர்களைப் பதிவிட்டு முறையே 85.6% அடைவுநிலையைப் பதிவிட்டுள்ளன, மற்றும் சீனத் தரங்கள் 3.5 மில்லியன் நேயர்களைப் பதிவிட்டு முறையே 70.7% அடைவுநிலையைப் பதிவிட்டுள்ளன.

• ராகா, மலேசியாவின் முதல் தரத் தமிழ் வானொலி தன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையை 1.6 மில்லியனாகப் பதிவிட்டுள்ளது. காலை அங்கம் 863,000 நேயர்களின் எண்ணிக்கையையும் இயக்க அங்கம் (Drive segment) 879,000 நேயர்களின் எண்ணிக்கையையும் பதிவிட்டுள்ளன.

• ERA, மலேசியாவின் முதல் தர மலாய் வானொலி 5.3 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டுள்ளது. 10 முதல் 29 வயதிற்க்குட்ப்பட்ட இளம் மலாய் நேயர்களுக்கு மத்தியில், 2.7 மில்லியன் நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டு மலேசியாவின் மிக உயர்ந்த வாராந்திர வானொலி அடைவுநிலையைத் தொடர்ந்து ERA அடைந்தது. காலை அங்கம் 2.8 மில்லியன் நேயர்களின் எண்ணிக்கையுடன் முதல் நிலையையும், இயக்க அங்கம் (Drive segment) 2.4 மில்லியன் நேயர்களுடன் உயர்ந்த நிலையையும் தக்க வைத்துக் கொண்டன. 1.0 மில்லியன் எண்ணிக்கையுடன் அனைத்து வானொலி தரங்களிலும் உயர்ந்தப் பிரத்தியேக நேயர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை ERA அடைந்தது.

• 5.0 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையுடன் மலேசியாவில் அதிகம் கேட்கப்படும் இரண்டாம் வானொலித் தரமாகவும் மலேசியாவின் இரண்டாம் தர மலாய் வானொலித் தரமாகவும் SINAR திகழ்கிறது. SINAR-இன், காலை அங்கம் 2.6 மில்லியனாக அதிகரித்தது, அதே நேரத்தில் இயக்க அங்கம் (Drive segment) 2.3 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டுள்ளது. 865,000 பிரத்தியேக நேயர்களின் எண்ணிக்கை உயர்வை SINAR பதிவிட்டுள்ளது.

• கிளந்தானிலிருந்து 39% நேயர்கள், பகாங்கிலிருந்து 20% நேயர்கள், திரங்கானுவிலிருந்து 23% நேயர்கள் மற்றும் மேற்கு கடற்கரையிலிருந்து 17% நேயர்கள் உட்படக் கிழக்கு கடற்கரை வட்டாரங்களில் முதல் தர வானொலியான GEGAR 2.1 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டுள்ளது.

• ZAYAN, 321,000 வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவுச்செய்தது. காலை அங்கம் 172,000 நேயர்களின் அதிகரிப்பைப் பதிவிட்டுள்ளது, இயக்க அங்கம் (Drive segment) 151,000 நேயர்களைப் பதிவிட்டுள்ளது.

• 2.4 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைக் கொண்ட HITZ FM, ஆங்கில வானொலித் தரங்களுக்கு மத்தியில் 356,000 உயர்ந்தப் ‘பிரத்யேக நேயர்களின்’ எண்ணிக்கையை அடைந்துள்ளது. 1.1 மில்லியன் நேயர்களுடன் ஆங்கிலத் தரங்களுக்கானக் காலை அங்கத்தின் அதிகபட்ச நேயர்களைக் கொண்ட வானொலியாகவும், 1.2 மில்லியன் நேயர்களுடன் ஆங்கிலத் தரங்களுக்கான இயக்க அங்கத்தின் (Drive segment) அதிகபட்ச நேயர்களைக் கொண்ட வானொலியாகவும் HITZ FM திகழ்கிறது.

• MIX FM-இன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்தது. காலை அங்க நேயர்களின் எண்ணிக்கை 617,000 அதிகரித்தது. அதே நேரத்தில், இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கை 636,000 அதிகரித்தது.

• LITE FM-இன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 855,000 அதிகரித்தது. காலை அங்க நேயர்களின் எண்ணிக்கை 406,000 அதிகரித்தது. அதே நேரத்தில், இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கை 393,000 அதிகரித்தது.

• MY-இன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியன் பதிவிட்டது. காலை அங்கம் மற்றும் இயக்க அங்கம் (Drive segment) முறையே 1.6 மில்லியன் மற்றும் 1.6 மில்லியன் நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டுச் சீன வானொலி தரங்களுக்கு மத்தியில் அவ்விரு அங்கங்களும் அதிக எண்ணிக்கையிலான நேயர்களை அடைந்துள்ளன. 728,000 பிரத்தியேக நேயர்களின் உயர்வை MY பதிவிட்டுள்ளது.

• 658,000 மற்றும் 634,000 காலை அங்கம் மற்றும் இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கையுடன் MELODY 1.2 மில்லியன் வாராந்திர நேயர்களின் உயர்வைப் பதிவிட்டுள்ளது.

• GOXUAN-இன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 244,000 அதிகரித்தது. காலை அங்க நேயர்களின் எண்ணிக்கை 115,000 அதிகரித்தது. அதே நேரத்தில், இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கை 102,000 பதிவிட்டது. 50,000 பிரத்தியேக நேயர்களின் உயர்வை GOXUAN பதிவிட்டுள்ளது.

இந்த ஆய்வு வானொலி கேட்கும் பழக்கத்தை அறிய 6 வாரங்களுக்கும் மேலாகப் பாரம்பரிய வானொலி டைரிகள் (75%) மற்றும் மின்-டைரிகள் (25%) ஆகியவற்றின் கலவையுடன் தீபகற்ப மலேசியா முழுவதும் 6,000 தனித்துவமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. 21 வானொலி தரங்கள் இவ்வலையின் சந்தாதாரர்கள் ஆவர்.

ஆஸ்ட்ரோ வானொலி தரங்கள் முதல் 10 சிறந்தப் பிராண்டுகளின் தரவரிசையில் 7 இடங்களைக் கைப்பற்றின.

தகவல்கள் மூலம்: ஜி.எஃப்.கே வானொலி நேயர்களின் அளவீட்டு ஆய்வு (GfK Radio Audience Measurement, RAM), 2022 இரண்டாம் அலை | முகநூல் பக்க அடைவுநிலை: முகநூல் வணிக மேலாளர் (ஆகஸ்டு – அக்டோபர் 2022) |மின்னியல் பதிவிறக்கங்கள்: ரேடியோஅக்திவ் (ஆகஸ்டு – அக்டோபர் 2022) |அகப்பக்கத்தின் தனித்துவமான வருகையாளர்கள் / அகப்பக்கத்தின் பார்வையாளர்கள்: Google Analytics (ஆகஸ்டு – அக்டோபர் 2022) |காணொளிப் பார்வையாளர்கள்: முகநூல் Creator Studio, CrowdTangle, யூடியூப் (அக்டோபர் 2022) | மொத்த சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள்: முகநூல், இன்ஸ்டாகிராம், கீச்சகம், யூடியூப், டிக்டாக் (அக்டோபர் 2022)