Home நாடு ராகா வானொலிப் போட்டி – ‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’ – பங்கேற்று ரொக்கப் பரிசுகளை...

ராகா வானொலிப் போட்டி – ‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’ – பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்

215
0
SHARE
Ad

‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’ ராகா வானொலிப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்

‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள்:

• ராகா இரசிகர்கள் இப்போது முதல் பிப்ரவரி 23 வரை ‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம 100 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் குறிப்பிட்ட அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் போட்டியில் பங்கேற்க முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

#TamilSchoolmychoice

• அதிர்ஷ்டசாலியானப் பங்கேற்பாளர்கள் வெற்றிப்பெற அறிவிப்பாளரால் வழங்கப்படும் “பழமொழியைப்” பத்து வினாடிகளுக்குள் முழுமையாகக் கூற வேண்டும்.

• சரியானப் பதிலைக் கூறும் பங்கேற்பாளர்கள் ரிம100 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், கொடுக்கப்பட்ட பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தச் சுற்றுக்குப் பனிப்பந்தாகும்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.