Home India Elections 2014 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை? – பிரணாப் முகர்ஜி!

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை? – பிரணாப் முகர்ஜி!

591
0
SHARE
Ad

biranapடெல்லி, மே 10 – நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் 14- வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பெயர் முகவரி தெற்கு கொல்கத்தாவில் உள்ளது. அவர் வாக்களிக்க அங்குதான் செல்லவேண்டும்.

தெற்கு கொல்கத்தா  நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகிற 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க பிரணாப் முகர்ஜி திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இப்போது யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

நாட்டின் குடியரசுத் தலைவர் எந்தக் கட்சியையும் சேராதவர், நடுநிலை வகிப்பவர் என்கிற முறையில் கடந்த காலத்தில் சில குடியரசுத் தலைவர்கள் வாக்களிக்காமல் இருந்ததுண்டு என்கிற அடிப்படையில், பிரணாப் முகர்ஜியும் தற்போது வாக்களிக்காமல் நடுநிலை வகிப்பார் என்று தெரிய வருகிறது.