Home Featured நாடு “நானும் உணவுக்கடைகளில் வேலை செய்தவள் தான்” – சாஹிட் மகள் தகவல்!

“நானும் உணவுக்கடைகளில் வேலை செய்தவள் தான்” – சாஹிட் மகள் தகவல்!

764
0
SHARE
Ad

Nurulhidayah Ahmad Zahidகோலாலம்பூர் – வெளிநாட்டினரை மலேசியாவில் வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றால், நீங்கள் அவர்கள் செய்யும் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் என்று நேற்று மலேசிய இளைஞர்களுக்கு துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்தார்.

அதனையடுத்து, இந்த விவகாரத்தில் உடனடியாக நாட்டின் பல முக்கியப் பிரமுகர்களிடமிருந்து பதிலடி வரத்தொடங்கியது.

நாங்கள் பணியாற்றத் தயார் ஆனால் அரசாங்கம் நாங்கள் கேட்கும் அடிப்படை சம்பளத்தைக் கொடுக்கத் தயாரா? என்று இக்லாஸ் ( Small and Medium Entrepreneurs Alliance) அமைப்பின் தலைவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா உட்பட பலர் கேள்வி எழுப்பினர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அம்ரான் பேன்ஸ் என்ற பிரபல வலைத்தள குழு, சாஹிட்டின் மகள் நூருல்ஹிடாயா அகமட் சாஹிட்டை வம்புக்கு இழுத்துள்ளது.

சாஹிட் விடுத்த சவாலை முதலில் அவரது மகள் நிறைவேற்றுவாரா? அது போன்ற அழுக்கான வேலைகளில் அவர் பணியாற்றுவாரா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், தன்னை தற்காக்கும் விதமாக நூருல்ஹிடாயா வெளியிட்டுள்ள கருத்தில், தான் பட்டப்படிப்பை முடித்த பிறகு 1700 ரிங்கிட் சம்பளத்தில் வேலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் தனது தந்தை அமைச்சராகக் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் பள்ளியில் படிக்கும் போது, ஜெயா ஜஸ்கோ, வாங்சா மாஜூவிலுள்ள ஆல்ஃபா ஆங்கிள் போன்ற உணவுக்கடைகளில் எனது கைச்செலவிற்காக இரகசியமாக வேலை செய்துள்ளேன்” என்று தனது இண்ஸ்டாகிராமில் நூருல்ஹிடாயா தெரிவித்துள்ளார்.

மேற்தட்டு மக்களாக வசிக்கும் சாஹிட்டும், அவரது குடும்பத்தினரும், மலேசியர்களின் பிரச்சனைகளை எப்படி அறிந்து கொள்வார்கள் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

அதற்குப் பதிலளித்துள்ள நூருல்ஹிடாயா, “நான் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது முந்தைய பதிவில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் வாழ்விற்குப் பின் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.