Home Featured நாடு ‘வர்த்தகத் தகராறு’ காரணமாக எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டுள்ளது!

‘வர்த்தகத் தகராறு’ காரணமாக எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டுள்ளது!

780
0
SHARE
Ad

vier-harmoniகோலாலம்பூர் – மலேசியத் துறைமுகத்திலிருந்து மாயமான 900,000 லிட்டர் டீசல் (1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு) கொண்ட எண்ணெய் கப்பலான வியெர் ஹார்மோனி, ‘வர்த்தகத் தகராறு’ காரணமாக கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, தொடர்பிலிருந்து விலகிய அக்கப்பல், தற்போது இந்தோனிசியாவின் பாத்தாம் அருகே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்கப்பலில் கேப்டன், “நிர்வாகத்தின் உள் பிரச்சினை” காரணமாகத் தான் கப்பலை இந்தோனிசியாவின் பாத்தாமிற்கு எடுத்துச் செல்வதாக, தனது நிர்வாகத்திடம், இரண்டு முறை கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice