Home Photo News இந்தோனிசியாவில் அன்வார் இப்ராகிம்

இந்தோனிசியாவில் அன்வார் இப்ராகிம்

946
0
SHARE
Ad

ஜாகர்த்தா : மலேசியாவின் 10-வது பிரதமராக பதவியேற்ற பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தோனிசியாவுக்கான வருகை அமைகிறது.

இன்று இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தா வந்தடைந்த அன்வார் இப்ராகிம் தம்பதியருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது. ஜாகர்த்தா வந்து சேர்ந்தவுடனேயே இருநாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. 10 நிறுவனங்கள் இத்தகைய உடன்படிக்கைகளை கையெழுத்திட்டுள்ளன.

அந்த நிறுவனங்களில் டிஎன்பி என்னும் தேசிய மின்சார வாரியமும் ஒன்றாகும். மறுசுழற்சி முறையிலான எரிசக்தியை உற்பத்தி செய்யும் ஆய்வுகளில் தேசிய மின்சார வாரியம் ஈடுபடும்.

#TamilSchoolmychoice

அன்வாரின் வருகை தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்: