Home நாடு கோலாலம்பூர் கோபுரம் விற்பனை தொடர்பில் இரண்டு டத்தோ பிரமுகர்கள் கைது

கோலாலம்பூர் கோபுரம் விற்பனை தொடர்பில் இரண்டு டத்தோ பிரமுகர்கள் கைது

438
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்வது கேஎல் டவர் என அழைக்கப்படும் கோலாலம்பூர் கோபுரம். அந்தக் கோபுரத்தின் உரிமை பெற்ற நிறுவனத்தின் பங்குகள் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடக்கியது. இதன் அடிப்படையில் டத்தோ அந்தஸ்து கொண்ட இரண்டு பிரமுகர்களை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட விசாரணைக்காக 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.