Home நாடு கோலாலம்பூர்-6 மாநிலங்களில் வெள்ள அபாயம்

கோலாலம்பூர்-6 மாநிலங்களில் வெள்ள அபாயம்

764
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெய்து வரும் தொடர் மழையால் கோலாலம்பூரும், மேலும் 6 மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கை வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூசா பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் தங்களின் வாகனங்களை உயர்ந்த இடங்களில் நிறுத்தி வைக்கும்படி மாநகரசபை மன்றத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரிலுள்ள 48 இடங்கள் வெள்ள அபாயம் கொண்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புத்ரா உலக வாணிப மையம், மலாயாப் பல்கலைக் கழகம், ஜாலான் டூத்தா, ஜாலான் டாங் வாங்கி, எல்ஆர்டி பங்சார், கம்போங் பந்தாய் டாலாம் ஆகியவையே அந்தப் பகுதிகளில் சிலவாகும்.