Home இந்தியா சென்னை உட்பட – தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை அபாயம்! விமான சேவைகள் தடைபடுமா?

சென்னை உட்பட – தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை அபாயம்! விமான சேவைகள் தடைபடுமா?

201
0
SHARE
Ad

சென்னை : மலேசியா-சிங்கப்பூரில் இருந்து தமிழ் நாட்டின் சென்னைக்கும் திருச்சிக்கும் தினமும் பல விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கடுமையான மழை அபாயம் இருப்பதால் விமான சேவைகளும் தடைபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தமிழக கடலோர பகுதிகளிலும், வங்கக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.