Home நாடு முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் புதிய தலைவர்!

முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் புதிய தலைவர்!

155
0
SHARE
Ad
முகமட் டுசுக்கி மொக்தார்

புத்ராஜெயா : டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் தலைவராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட அறிக்கையில் முகமட் டுசுக்கியின் நியமனம் நவம்பர் 12 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 145(1)-இன் படி, மாமன்னர் அவர்கள், டத்தோ முகமட் டுசுகி மொக்தாரை சட்டத் துறை தலைவராக நவம்பர் 12 முதல் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். நடப்பு சட்டத் துறைத் தலைவரான தான்ஸ்ரீ அகமட்  தெரிருடின் முகமட் சாலே கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக முகமட் டுசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“சட்டத் துறைத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த தான்ஸ்ரீ அகமட் தெரிருடினுக்கு அரசாங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது,” என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கிளந்தான் மாநிலத்தின் மாச்சாங்கில் பிறந்த முகமட் டுசுகிக்கு 57 வயதாகிறது.
இவர் மலேசியாவின் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவின் வொலங்காங் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

முகமட் டுசுகி சட்டத்துறை அலுவலகத்தில் பல்வேறு பதவிகளில் 31 ஆண்டுகள் பணியாற்றி சட்டத்துறையில் விரிவான அனுபவம் பெற்றுள்ளார்.

முகமட் டுசுகி செப்டம்பர் 2023-இல் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடியின் ஊழல் வழக்கில் முன்னணி வழக்கறிஞராகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.