Home உலகம் சிங்கப்பூர், உலகின் 5-வது சிறந்த விவேக மாநகர் – கோலாலம்பூருக்கு 73-வது இடம்!

சிங்கப்பூர், உலகின் 5-வது சிறந்த விவேக மாநகர் – கோலாலம்பூருக்கு 73-வது இடம்!

420
0
SHARE
Ad

சிங்கப்பூர் : ஸ்மார்ட் சிட்டி என்னும் உலகின் விவேக மாநகர்களின் வரிசையில் சிங்கப்பூர் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்திருக்கிறது. ஆசியா கண்டத்தில் முதலாவது விவேக மாநகராக சிங்கப்பூர் உருவெடுத்திருக்கிறது.

2023 பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தற்போது 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

உலகின் 10 சிறந்த விவேக மாநகர்களில் ஆசிய நாடுகளில் இருந்து இடம் பெற்றிருக்கும் ஒரே மாநகரம் சிங்கப்பூராகும்.

#TamilSchoolmychoice

சிறந்த உலக விவேக மாநகர்களின் பட்டியலில் 142 மாநகர்கள் இடம் பெற்றிருக்கின்றன. தொழில் நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எந்த மாநகரம் அதிக அளவில் உயர்த்துகிறது என்பதன் அடிப்படையில் மாநகரங்கள் தரவரிசையில் இடம் பெறுகின்றன.

உலகின் முதலாவது விவேக மாநகராக சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் நார்வேயின் ஆஸ்லோ, ஆஸ்திரேலியாவின் கான்பெரா, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய மாநகர்கள் இடம் பிடித்திருக்கின்றன.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூரை அடுத்து 5 மாநகர்கள் முதல் 20 இடங்களுகான வரிசையைப் பிடித்திருக்கின்றன. பெய்ஜிங் 13-வது இடத்தையும், தைப்பே 16-வது இடத்தையும், சியோல் 17-வது இடத்தையும், ஷங்காய் 19-வது இடத்தையும் ஹாங்காங் 20-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு 142 உலக மாநகர்களின் வரிசையில் 73-வது இடம் கிடைத்திருக்கிறது.