Home நாடு ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் : பொருளாதாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கை மிஞ்சும்!

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் : பொருளாதாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கை மிஞ்சும்!

73
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

கோலாலம்பூர் : மலேசியாவிலேயே மிக அதிக அளவில் பொருளாதார வலிமை கொண்ட வட்டாரமாக, கோலாலம்பூரை உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு கருதப்படுகிறது.

ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கையும் மிஞ்சும் விதத்தில் இன்னொரு பொருளாதார மண்டலம் உருவாகி வருகிறது. எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், ஜோகூர் மாநிலத்தின் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் கிள்ளான் பள்ளத்தாக்கை விட மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட வட்டாரமாக அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள்ளான உருவெடுக்கும் என பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி-(GDP) கூடுதலாக 28 பில்லியன் அமெரிக்க டாலரை இந்த ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் தன் பங்களிப்பாக நாட்டிற்கு வழங்கும் என்றும் ரபிசி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலேசியப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும்போது ரபிசி இந்த விவரங்களை வெளியிட்டார்

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அனுகூலங்களையும் சாதகங்களையும் வைத்துப் பார்க்கும்போது நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி வட்டாரமாக ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் திகழும் என்றும் ரபிசி தெரிவித்தார்.