Home உலகம் சிங்கப்பூரில் 5-வது விமான நிலைய முனையம்!

சிங்கப்பூரில் 5-வது விமான நிலைய முனையம்!

267
0
SHARE
Ad
சாங்கி விமான நிலையம் – கோப்புப் படம்

சிங்கப்பூர்: உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். ஏற்கனவே 4 முனையங்களை (டெர்மினல்) கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சாங்கி விமான நிலையத்தில் புதிய 5-வது முனையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்தவிமானப் போக்குவரத்து மையத்தின் ஆண்டுதோறும் கடக்கும் பயணிகள் கையாளும் திறனை பாதிக்கும் மேல் உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

2030-களின் நடுப்பகுதியில் செயல்பாட்டுக்கு வரும்போது, புதிய டெர்மினல் 5 ஆண்டுக்கு மேலும் 50 மில்லியன் பயணிகளுக்கான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.

இது தற்போதைய எண்ணிக்கையான 90 மில்லியனில் இருந்து மேலும் உயர்த்தப்படும். மேலும், இந்தப் புதிய விமானப் போக்குவரத்து மையம் தற்போதைய இலக்குகளான சுமார் 150 இடங்களிலிருந்து பயணம் செய்வது அதிகரிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சேவை செய்ய இனி அனுமதிக்கப்படும்.

“அடுத்த ஆண்டின் முதல் பாதியில் T5-இன் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம்,” என்று வோங் அறிவித்துள்ளார்.

சாங்கி விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும். கடந்த ஆண்டு கோவிட்டிலிருந்து அனைத்துலகப் பயணங்கள்  மீண்டெழுந்த பின்னர், சுமார் 60 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. இந்த ஆண்டின் முதல் பாதியில், சாங்கியில் பயணிகள் போக்குவரத்து தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளின் கிட்டத்தட்ட 100 விழுக்காட்டு நிலைக்கு திரும்பியதாக வோங் கூறினார்.

உலகின் மற்ற நாடுகளின் தலைநகர்களும் இதுபோன்ற மிகப் பெரிய விமான நிலையங்களைக் கட்டி வருகின்றன. வியட்நாம் ஹோ சி மின் நகருக்கு அருகில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய விமான நிலையத்தை கட்டி வருகிறது. அதே வேளையில், ஹாங்காங் தனது பன்னாட்டு விமான நிலைய மையத்தை விரிவுபடுத்த 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிடுகிறது.