புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானும் ஆளில்லா சிறுவிமானங்கள் (டுரோன்), ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் 24 விமான நிலையங்கள் எதிர்வரும் மே 15 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விமான நிலையங்கள் பாகிஸ்தானுடனான இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளவையாகும். இந்த நடவடிக்கையால் பல மலேசிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதை மலேசிய விமானங்கள் தவிர்த்து வருகின்றன.
மூடப்பட்டிருக்கும் விமான நிலையங்கள், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள மாநிலங்களான பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவையாகும்.