Home நாடு மக்கோத்தா இடைத் தேர்தல்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேரடிப் போட்டி!

மக்கோத்தா இடைத் தேர்தல்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேரடிப் போட்டி!

235
0
SHARE
Ad
சைட் ஹூசேன் – முகமட் ஹாய்சான்

குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல், தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல், என இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியாக  உருவெடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 14) குளுவாங், டேவான் துங்கு இப்ராகிம் இஸ்மாயில் மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்படி, தேசிய ஒற்றுமை அரசாங்க – தேசிய முன்னணி வேட்பாளராக குளுவாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் ஹூசேன் சைட் அப்துல்லா போட்டியிடுகிறார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த முகமட் ஹாய்சான் ஜாஃபார் போட்டியிடுகிறார். அவருடன் பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் அந்தக் கூட்டணியின் தேர்தல் இயக்குநருமான அஸ்மின் அலியும் உடன் வந்தனர்.

#TamilSchoolmychoice

முன்கூட்டிய வாக்களிப்பு செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும்.

ஒரு வணிகரான அம்னோ வேட்பாளர் சைட் ஹூசேன் சைட் அப்துல்லா, மலேசியத் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் டிப்ளமா பட்டம் பெற்றவராவார். குளுவாங் நகரமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். சீன மொழியான மாண்டரினில் உரையாடும் திறனையும் அவர் பெற்றுள்ளார்.

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் ஷாரிபா அசிசா (63) காலமானதைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் மக்கோத்தா ஒன்றாகும்.