Home நாடு ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் அம்னோவின் ஷாரிபா காலமானார்!

ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் அம்னோவின் ஷாரிபா காலமானார்!

264
0
SHARE
Ad
ஷாரிபா அசிசா சைட் ஜைன்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்திலுள்ள மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான அம்னோவின் ஷாரிபா அசிசா சைட் ஜைன் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானார். அவருக்கு வயது 63. குளுவாங் மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசமான நிலையில் அவர் இன்று காலமானார்.

கடந்த 2022-இல் நடைபெற்ற ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஷாரிபா 16,611 வாக்குகள் பெற்று 5,166 வாக்குகள் பெரும்பான்மையில் மக்கோத்தா தொகுதியில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் 11,445 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் 7,614 வாக்குகளும் பெற்றனர். இரண்டு தவணைகளுக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநிலத்தின் குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் மக்கோத்தா ஒன்றாகும்.

ஜோகூர் சட்டமன்ற அவைத் தலைவரான புவாட் சர்காஷி, ஷாரிபாவின் மறைவை உறுதிப்படுத்தினார்.