Home நாடு மக்கோத்தா : தேசிய முன்னணியே போட்டியிடும்! பக்காத்தான் அறிவிப்பால் சர்ச்சைக்கு முடிவு!

மக்கோத்தா : தேசிய முன்னணியே போட்டியிடும்! பக்காத்தான் அறிவிப்பால் சர்ச்சைக்கு முடிவு!

385
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா  சட்டமன்ற இடைத் தேர்தலில் தாங்களே போட்டியிட வேண்டும் என அமானா கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அந்தத் தொகுதி தேசிய முன்னணிக்கே ஒதுக்கப்படுவதாக பக்காத்தான் தலைமைச் செயலாளர் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்ற சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கூட்டணி மக்கோத்தா தொகுதியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக செப்டம்பர் 28ஆம் தேதியை மலேசியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நாளாக செப்டம்பர் 14ஆம் தேதியையும், முன்கூட்டிய வாக்குப்பதிவு 24ஆம் தேதியில் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜோகூரின் மக்கோத்தா மாநில சட்டமன்றத் தொகுதி, அம்னோவைச் சேர்ந்த அதன் உறுப்பினர் ஷரீஃபா அசிசா சைட் ஜெயின் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து காலியானது.

2022 ஜோகூர் மாநில தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ஷரீஃபா, நான்கு முனைப் போட்டியில் தனது போட்டியாளர்களை 5,166 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஷாரிபா அசிசா சைட் ஜைன்

மக்கோத்தா தொகுதியில் அம்னோ போட்டியிடுவதை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி, ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர் அங்கு போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.