Home நாடு முஹிடின் யாசின் மீது காவல் துறை விசாரணை

முஹிடின் யாசின் மீது காவல் துறை விசாரணை

203
0
SHARE
Ad
முஹிடின் யாசின்

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் 3-ஆர் (3R) என்னும் இனம், மதம், அரசவையினர் குறித்து தவறான கருத்து தெரிவித்ததால் அவர்மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நெங்கிரி இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்யும்போது முஹிடின் அத்தகைய கருத்துகளைத் தெரிவித்தார் என புகார்கள் காவல் துறையில் செய்யப்பட்டன. இதுவரையில் 29 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) ரசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.

முடுக்கி விடப்பட்டிருக்கும் விசாரணைகளைத் தொடரும் பொருட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி முஹிடின் காவல் துறைக்கு வருகை தந்து வாக்குமூலத்தை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.