Home இந்தியா திருப்பதி ஆலயத்தில் நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம்! பலர் காயம்!

திருப்பதி ஆலயத்தில் நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம்! பலர் காயம்!

72
0
SHARE
Ad

திருப்பதி: தென் இந்தியாவின் பிரபலமான திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் எதிர்வரும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கன நுழைவுச் சீட்டு பெறக் காத்திருந்த கூட்டத்தினரின் நெரிசலில் 6 பேர் மரணமடைந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.

நுழைவுச் சீட்டு பெறக் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் திடீரெனத் திறக்கப்பட்ட நுழைவாயிலை நோக்கி ஓடியதில் ஏற்பட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர்.

புதன்கிழமை (ஜனவரி 8) இரவு நடந்த அச்சம்பவத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

எலும்பு முறிவு காரணமாக 12 பேர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யில் உள்ளனர். அவர்கள் அபாய கட்டத்தில் இல்லை என்று ஓர் அதிகாரி கூறினார்.
பலியானவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இன்று வியாழக்கிழமை (ஜனவரி 9) ஆந்திர மாநில அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மரணமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.  பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தச் சம்பவத்திற்கு கோயில் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தான் வருத்தமடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தன் அனுதாபச் செய்தியில் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.

இதற்கிடையில் திருப்பதி சம்பவத்தால் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளவும் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19ஆம் தேதி வரை பக்தர்கள் அதன் வழியே தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.