Home இந்தியா கவிஞர் வைரமுத்துவுடன் சரவணன் சந்திப்பு

கவிஞர் வைரமுத்துவுடன் சரவணன் சந்திப்பு

789
0
SHARE
Ad

சென்னை : இந்தியாவின் இந்தூர் நகரில் நடைபெறும் 17-வது பாரதிய பிரவாசி திவாஸ் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் சென்னையில் கவிஞர் வைரமுத்துவைச் சந்தித்தார்.

அவரைச் சந்தித்தப் புகைப்படத்தை தன் முகநூலில் பதிவிட்ட அவர் பின்வருமை மூதுரை வரிகளையும் பதிவிட்டார்:

நற்றா மரைக்கயத்தில் நல்அன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

#TamilSchoolmychoice

சென்னை கடற்கரையோரம் கடலலைகளின் தாலாட்டில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்றையும் தன் முகநூலில் பதிவிட்ட சரவணன், பாரதியாரின் ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதையையும் அந்தப் புகைப்படத்தோடு பதிவிட்டார்.

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் நடைபெறும் 17ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஜனவரி 10-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு என்பது இந்திய அரசாங்கம்  வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான முக்கிய தளமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளான 9 ஜனவரி 2015-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் இந்த வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.