Home நாடு சபா பிரச்சனையைத் தீர்க்க, ஜாகர்த்தாவிலிருந்து நேரடியாக கோத்தா கினபாலு வந்தடைந்த அன்வார்!

சபா பிரச்சனையைத் தீர்க்க, ஜாகர்த்தாவிலிருந்து நேரடியாக கோத்தா கினபாலு வந்தடைந்த அன்வார்!

616
0
SHARE
Ad
இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து அன்வார் இப்ராகிம் புறப்பட்டபோது…

கோத்தா கினபாலு : வழக்கமாக வெளிநாடு செல்லும் பிரதமர்கள் விடுமுறை இல்லையென்றால் நேரடியாக தலைநகருக்குத் திரும்புவதுதான் வழக்கமாகும்.

ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக, தனது இந்தோனிசியா வருகையை முடித்துக் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரடியாக கோத்தாகினபாலு வந்தடைந்தார். வெடித்திருக்கும் சபா அரசியல் பிரச்சனையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்கத்தான் அன்வார் கோத்தாகினபாலு வந்திருக்கிறார்.

இன்றிரவு 9.40 மணியளவில் கோத்தாகினபாலு விமான நிலையம் வந்தடைந்த அவரை சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், துணை முதலமைச்சர் ஜெஃப்ரி கித்திங்கான் உள்ளிட்ட பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் வரவேற்றனர்.