Home நாடு ஹாஜிஜி நூர் முதலமைச்சராகத் தொடர அன்வார் ஆதரவு!

ஹாஜிஜி நூர் முதலமைச்சராகத் தொடர அன்வார் ஆதரவு!

502
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : சபாவில் எழுந்திருக்கும் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக நேற்றிரவு கோத்தாகினபாலு வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் தனது பதவியில் தொடர்வதற்கு நல்லாசிகளையும் ஆதரவையும் வழங்கியுள்ளார்.

ஹாஜிஜி நூருடன் சுமார் ஒரு மணி நேரம் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் அன்வார் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்த விவரங்களை வெளியிட்டார். இந்த சந்திப்பில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டார்.

வழக்கமாக வெளிநாடு செல்லும் பிரதமர்கள் விடுமுறை இல்லையென்றால் நேரடியாக தலைநகருக்குத் திரும்புவதுதான் வழக்கமாகும்.

இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து அன்வார் இப்ராகிம் புறப்பட்டபோது…
#TamilSchoolmychoice

ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக, தனது இந்தோனிசியா வருகையை முடித்துக் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரடியாக கோத்தாகினபாலு நேற்றிரவு (ஜனவரி 9) வந்தடைந்தார். வெடித்திருக்கும் சபா அரசியல் பிரச்சனையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்கத்தான் அன்வார் கோத்தாகினபாலு வந்து சேர்ந்தார்.

நேற்றிரவு 9.40 மணியளவில் கோத்தாகினபாலு விமான நிலையம் வந்தடைந்த அவரை சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், துணை முதலமைச்சர் ஜெஃப்ரி கித்திங்கான் உள்ளிட்ட பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் வரவேற்றனர்.

உடனடியாக அவர்களுடன் அன்வார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக சபா அரசியல் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு தற்போதைக்கு ஏற்பட்டிருக்கிறது.

MA63 என்னும் சபா, சரவாக் மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பிலான சில முக்கிய சட்டத் திருத்தங்கள் இன்று நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன.