Home Featured கலையுலகம் “எங்களுக்கு சரியாக நீச்சல் வராது” – நீரில் மூழ்குவதற்கு முன் கன்னட நடிகர்கள் பேட்டி!

“எங்களுக்கு சரியாக நீச்சல் வராது” – நீரில் மூழ்குவதற்கு முன் கன்னட நடிகர்கள் பேட்டி!

1137
0
SHARE
Ad

actor-7591பெங்களூர் – சண்டைக் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த கன்னட நடிகர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

‘மஸ்தி குடி’ என்ற படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் திப்பகொண்டனஹள்ளி என்ற இடத்தில் நடைபெற்று வருகின்றது.

அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக நடிகர்கள் அணில், உதய் ஆகிய இருவரும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் அவர்கள் நீரில் இருந்து மேலே வரவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தற்போது அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, இக்காட்சி படமாக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் இருவரும் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தங்களுக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.