Home One Line P2 டெஸ்லா கார் தயாரிப்பு மையம் பெங்களூருவில் அமைக்கப்படுகிறது

டெஸ்லா கார் தயாரிப்பு மையம் பெங்களூருவில் அமைக்கப்படுகிறது

782
0
SHARE
Ad

பெங்களூரு : அமெரிக்காவின் மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நிர்மாணிக்கிறது.

டெஸ்லா மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் கால் பதிக்கும் அறிவிப்பை டெஸ்லா ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் எந்த மாநிலத்தில் தனது தொழிற்சாலையை அமைக்கும் என்ற ஆர்வம் தொழிலதிபர்களிடத்தில் எழுந்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கர்நாடக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் பெங்களூருவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமையும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவில் கடந்த மாதத்தில் டெஸ்லா தனது “Tesla Motors India and Energy Private Limited” என்ற பெயரிலான இந்தியத் துணை நிறுவனத்தைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து டெஸ்லாவின் தொழிற்சாலை பெங்களூருவில் அமையக் கூடும் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன.

அதற்கேற்ப கர்நாடக அரசின் அறிக்கையும் அமைந்திருக்கிறது.

சுற்றுச் சூழல் பாதிப்புகளைக் குறைக்க மின்சாரம் போன்ற சக்தியை அடிப்படையாகக் கொண்ட தொழில்களைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சலுகைகளை இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.