கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும்.
கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் சைபுல் அஸ்லி கமருடின், மற்ற 6 பேருடன் அமைச்சர் உணவு உண்ணும் புகைப்படம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
” விசாரணை அறிக்கையை தொடங்கப்பட்டுள்ளது,” என்று சைபுல் அஸ்லி எப்எம்டியிடம் கூறினார்.
சனிக்கிழமை, அனுவார் மூசா கோலாலம்பூரில் ஒரு நகர்ப்புற பண்ணை நிகழ்ச்சியில் ஆறு பேர் கொண்ட மேசையில் அமர்ந்திருந்த புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டது.
அமைச்சர் சிறிது நேரம் மட்டுமே அங்கு அமர்ந்திருப்பதாக பின்பு ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
“நான் பண்ணையில் இருந்தபோது, சிறிது நேரம் உட்கார்ந்து நகர்ந்தேன், ஏனெனில் ஏற்பாட்டாளர் கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை,” என்று அமைச்சர் கூறினார்.
கட்டுப்பாடு விதிமுறையைப் பின்பற்றாததற்காக ஏற்பாட்டாளர் நேற்று மன்னிப்பு கோரினர்.
தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், சாப்பிடுவது அனுமதிக்கப்படுகிறது, ஆனால், ஒரு மேசையில் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.