கோலாலம்பூர்: அரசியல் காரணங்களுக்காக இன உணர்வுகளை கையாளுவோர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஒற்றுமை திட்டம் மற்றும் தேசிய ஒற்றுமை செயல் திட்டம் (புளூபிரிண்ட்) 2021-2030- ஐ அறிமுகப்படுத்திய பிரதமர், இது பல இன மக்கள்தொகை கொண்ட நாடுகளின் மிகப்பெரிய சவால் என்றார்.
“இன உணர்வுகளை தூண்டுவதன் மூலம் தங்கள் அரசியல் நலன்களை உயர்த்த முயற்சிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்,” என்று அவர் முகநூலில் ஒளிபரப்பாகிய நேரடி உரையில் பிரதமர் கூறினார்.
ஒற்றுமையை அச்சுறுத்தும் விஷயங்களில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்றும், அதனால்தான் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தை அரசு அமைத்தது என்றும் அவர் கூறினார்.
கொவிட் -19 க்கு எதிரான போரில் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்திய மக்களும், முன்னணி பணியாளர்களையும் மொகிதின் பாராட்டினார்.
“இந்த பச்சாத்தாபம் வலுப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது இன உறவுகளுக்கான சவால்களை மிகவும் திறம்பட சமாளிக்க உதவும்,” என்று கூறினார்.
தேசிய ஒற்றுமை நிகழ்ச்சி நிரலில், “பன்முகத்தன்மையில் ஒற்றுமை” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், மக்களிடையே ஒற்றுமையைப் பயன்படுத்தவும், பலப்படுத்தவும், பராமரிக்கவும் நீண்டகால உத்திகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.