வாஷிங்டன் : டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கும் மண்டபத்தில் பல முக்கிய வணிகப் புள்ளிகளும் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த எக்ஸ் தள உரிமையாளரும் டெஸ்லா மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எனினும் இடப் பற்றாக்குறை காரணமாக இவர்கள் அனைவரும் அமர நாற்காலி இல்லாமல் நின்று கொண்டிருப்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டின. சிறிது நேரத்திற்குப் பின்னரே அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டன.