Home உலகம் டிரம்ப்-பைடன் ஒரே காரில் பயணம்!

டிரம்ப்-பைடன் ஒரே காரில் பயணம்!

125
0
SHARE
Ad
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் மனைவியுடன் தம்படம் எடுத்துக் கொண்ட பைடன் தம்பதியர்

வாஷிங்டன் : (மலேசிய நேரம் இரவு 11.50) 47-வது அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில் ஜோ பைடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அவரும் டிரம்பும் இணைந்து ஒரே வாகனத்தில் பயணம் செய்து டிரம்பின் பதவியேற்பு விழா நடைபெறும் கேப்பிட்டல் என்னும் நாடாளுமன்றக் கட்டடத்தை அடைந்தனர்.

பைடனின் மனைவியும் அதே காரில் பயணம் செய்தார். இரண்டு அதிபர்களும் இணைந்து இவ்வாறு இணைந்து பயணம் செய்வது மிக அபூர்வமான சம்பவம் என ஊடகங்கள் வர்ணித்தன.

பதவியேற்பு மண்டபத்திற்கு டிரம்ப் அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் அமைச்சர்களும் வருகை தந்தனர்.

#TamilSchoolmychoice

கடுமையான குளிர் காலம், வானிலை சரியில்லை என்ற காரணங்களைக் காட்டி டிரம்பின் பதவியேற்பு சடங்குகள் இந்த முறை உள் அரங்கிலேயே நடத்தப்படுகின்றன.

இதற்கு முன்னர் இவ்வாறு அதிபர் ஒருவரின் பதவியேற்பு சடங்கு உள் அரங்கிலேயே நடத்தப்பட்டது 1980-ஆம் ஆண்டில்! அந்த அதிபர் ரொனால்ட் ரீகன். அதற்குப் பின்னர் அதிபராகப் பதவியேற்றவர்கள் அனைவரும் திறந்த வெளி அரங்கில் – வெள்ளை மாளிகையின் முன்புதான் – பதவியேற்றுக் கொண்டார்கள்.

நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றன.