வாஷிங்டன் : 47-வது அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடுமையான குளிர் காலம், வானிலை சரியில்லை என்ற காரணங்களைக் காட்டி அவரின் பதவியேற்பு சடங்குகள் இந்த முறை உள் அரங்கிலேயே நடத்தப்படவிருக்கின்றன.
இதற்கு முன்னர் இவ்வாறு அதிபர் ஒருவரின் பதவியேற்பு சடங்கு உள் அரங்கிலேயே நடத்தப்பட்டது 1980-ஆம் ஆண்டில்! அந்த அதிபர் ரொனால்ட் ரீகன். அதற்குப் பின்னர் அதிபராகப் பதவியேற்றவர்கள் அனைவரும் திறந்த வெளி அரங்கில் – வெள்ளை மாளிகையின் முன்புதான் – பதவியேற்றுக் கொண்டார்கள்.
பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
டிரம்ப் பதவியேற்றதும் முதல் கட்டமாக அவர் பிறப்பிக்கப் போகும் அதிரடித் திட்டங்கள் என்னவாக இருக்கும் – அதனால் பாதிப்படையப் போகும் உலக நாடுகள் யாவை – வணிகங்கள் யாவை – சீனா மீதான அணுகுமுறை – இஸ்ரேல், ஹமாஸ் போர்நிறுத்தம் – ஈரான் – ரஷியா, உக்ரேன் போர் – கிரின்லாந்து தீவை அமெரிக்க ஆக்கிரமிக்குமா? – கனடாவுடனான நல்லுறவுகள் மேம்படுமா? – என பல விவகாரங்கள் என டிரம்பின் அடுத்த கட்ட உத்தரவுகளுக்காக – நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றன.