பிரசல்ஸ் (பெல்ஜியம்) – பிரதமர் என்ற முறையில் எத்தனையோ பணிகளின் அழுத்தம் – சுமை – இருந்தாலும், கிடைக்கும் இடைவெளிகளில் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவர் நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
பிரிட்டனுக்கான தனது வருகையை முடித்துக் கொண்டு தற்போது அருகாமையில் இருக்கும் நாடான பெல்ஜியத்துக்கு அதிகாரத்துவ அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர். தற்போது ஐரோப்பாவில் குளிர்காலப் பருவம். நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) இரவு, தனது அதிகாரத்துவ பணிகளை நிறைவு செய்த பின்னர் கடுங்குளிர் நிலவும் சூழலிலும் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சின் வீதிகளில் நடைப் பயிற்சி மேற்கொண்டார் அன்வார்.