வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்கும் விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களும் தம்பதியராக இணைந்து கலந்து கொண்டனர். பில் கிளிண்டன் – ஹிலாரி கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தம்பதியர், ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனியாக வருகை தந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா தான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் ஒபாமா தம்பதியருக்கிடையில் விவாகரத்து பிரச்சனை நிலவுவதாக சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
டிரம்பிடம் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கமலா ஹாரிசின் கணவர், ஜோ பைடனின் மனைவி ஆகியோரும் பதவியேற்பு விழா நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்து கலந்து கொண்டனர்.