வாஷிங்டன் : பொதுவாக அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு விழா வெள்ளை மாளிகையிலேயே நடைபெறும். வெள்ளை மாளிகையில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு அதிபர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவில் பின்பற்றப்படும் பாரம்பரியம்.
அதன் காரணமாக, பொதுவாக அதிபர் பதவியேற்பு விழாக்களில் பதவி விலகிச் செல்லும் அதிபர் கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த முறை கடுங்குளிர் காரணமாக, டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சிகள் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தின் உள் அரங்கிலேயே நடைபெற்றன.
இதன் காரணமாக, பதவி விலகிச் செல்லும் ஜோ பைடன், துணையதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். கமலா ஹாரிஸ் டிரம்பிடம் அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர் என்றாலும் ஜனநாயக மரபுகளைக் காக்கும் வண்ணம் அவர் டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.