முதல் கட்டமாக மெக்சிகோவை எல்லையாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் தென்பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும் அங்கு இராணுவம் அனுப்பி வைக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்பின் பதவியேற்பு விழாவைக் கண்டு ரசிக்க அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் நாடு முழுமையிலுமிருந்து திரண்டனர்.
அரசாங்க நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காக ஒரு தனி அமைச்சு உருவாக்கப்படும் என்றும் அமெரிக்காவில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாத பேச்சு சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.
பனாமா கால்வாயை அமெரிக்கா தன்வசம் எடுத்துக் கொள்ளும் என்ற அதிரடி அறிவிப்பையும் அதிபராகத் தனது முதல் உரையில் டிரம்ப் தெரிவித்தார். பனாமா நாட்டுக்கு அதனை நாம் கொடுத்தோம் – ஆனால் தற்போது சீனா பனாமா கால்வாயை நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் டிரம்ப் சாடினார்.