Home Featured வணிகம் ‘ரெட்கியூ’ புதிய அலுவலகத்திற்கு ஏர் ஆசியா பணியாளர்கள் இடமாற்றம்!

‘ரெட்கியூ’ புதிய அலுவலகத்திற்கு ஏர் ஆசியா பணியாளர்கள் இடமாற்றம்!

663
0
SHARE
Ad

airasiaசிப்பாங் – கேஎல்ஐஏ2-ல் அமைக்கப்பட்டிருக்கும் ரெட்கியூ என்ற புதிய தலைமையக அலுவலகத்தில் ஏர்ஆசியா மற்றும் ஏர்ஆசியா எக்ஸ் பணியாளர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக பணியாற்றத் தொடங்கினர்.

18,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த அளவலகம் சுமார் 2,000 ஏர் ஆசியா பணியாளர்கள் பணியாற்றக் கூடிய வசதி கொண்டது.

ரெட் குவார்டெர்ஸ் என்பதின் சுருக்கமே ரெட்கியூ என்றழைக்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அலுவலகத்தின் கட்டிட வேலைகள் துவங்கப்பட்டன.

மலேசியா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் நிலை விமான நிறுவனமாகவும், நிபுணத்துவம் வாய்ந்த, அதே வேளையில், மகிழ்ச்சியும், நட்புறவும் கொண்ட பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அலுவலக வடிவமைப்பில் ஏர் ஆசியா முனைப்பு காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.